Saturday, November 18, 2017

பாதுகாப்புக் கேட்டு, ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி..!



சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட காதல் தம்பதியினர், பாதுகாப்பு கேட்டு, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.







தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ரமணஜோதி என்ற பெண்ணும், பள்ளமடையை சேர்ந்த மகேஸ்வரன் என்பவரும் ஒரே இடத்தில் பணி புரிந்து வரும் சூழலில் கடந்த 5 மாதங்களாக இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர்.

இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, இருவரும் நேற்று கோயிலில் திருமணம் செய்துகொண்டுள்ளனர். பெண் வீட்டார் தொடர்ந்து மிரட்டி வருவதால், பாதுகாப்பு கேட்டு காதல் தம்பதியினர், நெல்லை ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.


No comments:

Post a Comment